விழுப்புரம். ஏப், 13 மாவட்ட காவல்துறை எஸ்பி பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வாரத்தில் ஒரு முறை மட்டுமே நகரத்திற்குள் வரவேண்டும்,
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக காய்கறி சந்தைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு அவர்கள் இயக்கிவரும் வாகனங்களுக்கு இன்று நீல நிற பெயிண்ட் பூசப்படுகிறது. இவர்கள் அடுத்த திங்கட்கிழமைக்கு முன் மீண்டும் வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இதுபோன்று ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டும் சந்தைக்கு செல்லவும் அவர்களின் வாகனங்களில் வெவ்வேறு வண்ணங்களை பூசி கூட்ட நெரிசலை தவிர்க்கம் சமூக இடைவெளியை பின்பற்றவும் மாவட்ட காவல்துறையால் இம்முறை கையாளப்படுகிறது. வருகிறார்கள் இதில் ஒரு பகுதியாக மாவட்ட எஸ் பி ஜெயக்குமார் இருசக்கர வாகனத்தில் கலர் பெயிண்டிங் பூசப்பட்டு இனிவரும் காலங்களில் மக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.. தின ஓசை செய்திக்காக விழுப்புரம் மாவட்ட செய்தியாளர், எஸ் கே, மாதவன். செல் 9943089834.
" alt="" aria-hidden="true" />