தூத்துக்குடியில் உள்ள வணிக வளாகங்களை மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு.



தூத்துக்குடியில் உள்ள வணிக வளாகங்களை மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு.

 

பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்க அறிவுறுத்தல்

 

இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அருண்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

 

சீனாவில் உருவான கரோனோ வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் பாதிப்பு ஏற்பட்ட ஒரு மாத காலத்திலேயே அந்த வைரஸ் குறித்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தற்போது தமிழக அரசின் அறிவிப்புக்கு பின்னர் தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் ஓட்டல், சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் மூடப்பட்டுள்ளது. 

 

தூத்துக்குடி நகரில் உள்ள லாட்ஜ்களில் தங்கியுள்ள வெளி மாநில, வெளிநாட்டினர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தூத்துக்குடி நகரில் உள்ள டி.எஸ்.எப் பிளாசா, வேலவன் ஹைபர் மார்க்கெட், பெரிசன் பிளாசா ஆகிய வணிக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை காவல்துறை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

திருமண மண்டபங்களில் வருகிற 31ம் தேதி வரையில், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் மட்டுமே நடத்த அனுமதி அளிக்கபட்டுள்ளது. புதிதாக திருமணங்கள் புக் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. திருமண விழா நடைபெற்ற பின்னரும், நடைபெறும் முன்னரும் கிரிமி நாசினி தெளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், ஆம்னி பஸ்களில் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில தெளிக்கப்பட்டு வருகிறது. கோயில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாடு நடக்கும் முன்னரும் பின்னரும் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. 

 

பொதுஇடங்களில் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மாநகர் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் கூடும் 10 இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப் பட்டுள்ளது. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 

 

இதையடுத்து தூத்துக்குடியில் முக்கிய வணிக வளாகங்கள் மூடப்பட்டது. 

" alt="" aria-hidden="true" />